Categories
இந்திய சினிமா சினிமா

எனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணை தீவிரமாகக் காதலித்தார் ஷாருக்கான் – சல்மான் கூறிய கதை!

25 ஆண்டுகள் கடந்த பிறகு தனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணை ஷாருக் தீவிரமாகக் காதலித்ததாக மிகவும் சுவாரஸ்யமாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருக்கிறார் சல்மான்கான்.

 எனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணின் பெயரை, தனது ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு வைத்து ‘தார்’ என்ற படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த கதையை நினைவுபடுத்தினார் நடிகர் சல்மான்கான். பாலிவுட் டாப் நடிகரான சல்மான்கான், இந்தி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பல சீசன்களாக தொகுத்து வழங்கிவருகிறார். இதனிடையே இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த நடிகர் அஜய் தேவ்கன், கஜோல் ஆகியோரிடம் உரையாடியபோது தனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணிண் பெயரை, ஷாருக்கான் படத்தின் ஹீரோயினுக்கு வைத்திருந்ததைப் பற்றி கூறினார்.

இதில், ‘கிரண் என்ற பெண் மீது எனக்கு இருந்த ஈர்ப்பு பற்றி ஷாருக்கானிடம் கூறியிருந்தேன். அவர் அந்தப் பெண்ணின் பெயரை ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு வைத்து ‘தார்’ படத்தில் நடித்தார். அங்கிருந்துதான் எல்லாமே எனக்குத் தொடங்கியது’ என்றார்.

1993இல் வெளியான ‘தார்’ என்ற திரைப்படத்தில் சன்னி தியோல், ஷாருக்கான், ஜூகி சாவ்லா, அனுபம் கேர் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். படத்தில் கிரண் என்ற கேரக்டரில் தோன்றும் ஜூகி சாவ்லாவை தீவிரமாகக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் ஆண்ட்டி-ஹீரோவாக ஷாருக் நடித்திருப்பார். படம் முழுவதும் வில்லத்தனமான கதாபாத்திரத்தின் வாயிலாக நடிப்பில் அவர் வெளுத்து வாங்கியிருப்பார். இந்தப் படத்துக்காக சிறந்த வில்லன் நடிகர் என்ற ஃபிலிம் பேர் விருதைப் பெற்றார் ஷாருக்.

தற்போது படம் வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்த பிறகு, அந்தப் படத்தில் ஷாருக் காதலிக்கும் பெண்ணின் கதாபாத்திரத்தின் பெயர், தனக்கு ஈர்ப்பு இருந்த கிரண் என்பவரின் பெயர்தான் என்பதை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நினைவுபடுத்தினார் சல்மான்கான். இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கானை பற்றி சல்மான் பேசுவது பலமுறை நிகழ்ந்துவருகிறது.

முன்னதாக, ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ படத்தில் ஓடும் ரயிலில் செல்லும் ஷாருக்கின் தனது கரங்களை நீட்ட, கதாநாயகி கஜோல் ஓடிவந்து பற்றிக்கொள்வதுபோல் நானும் ஒரு படத்தில் நடித்துள்ளேன். இதில் சிறிய வித்தியாசமாக நான் நடித்த படத்தில் ரயில் நின்றுகொண்டிருக்கும் என்று சால்மான் கூற, ரசிகர்கள் பலத்த கரகோஷங்களுடன் சிரிப்பு வெடிகளை வெடித்தனர்.

பாலிவுட்டின் எவர் கிரீன் சூப்பர் ஹிட் படமான ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ படத்தில் ஓடும் ரயிலில் செல்லும் ஷாருக்கை ஓடிவந்து, அவரது கரங்களைப் பற்றிக்கொண்டு கதாநாயகி கஜோல் ரயிலில் ஏறும் காட்சி, கிளாசிக் காட்சியாக இன்றுவரை திகழ்கிறது. இதுபோல் தனக்கும் நிகழ்ந்திருப்பதை நகைச்சுவை ததும்ப தெரிவித்தார் சல்மான்.

Categories

Tech |