Categories
உலக செய்திகள்

இந்த வருஷத்துக்குள்ள முடிஞ்சிடும்… மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.. சுகாதாரச் செயலாளர் நம்பிக்கை ….!

கொரோனா இந்த ஆண்டுக்குள் முடிவடையும் என்று சுகாதார செயலாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருந்தொற்று அதிக உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சில நாடுகளில் கொரோனா சற்று குறைந்து வந்தாலும், சில நாடுகளில் உருமாறிய குரானா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முன்பிருந்த வைரஸை விட 70% வேகமாகப் பரவும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.ஆகையால் இது குறித்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பொது மக்களின் பயத்தை போக்கும் வகையில் பிரிட்டன் சுகாதாரச் செயலாளர் மாட் ஹான்காக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,கொரோனாவால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கு தடுப்பூசி மற்றும் புதிய சிகிச்சை முறைகளின் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா என்பது சாதாரண சிகிச்சை அளிக்கக் கூடிய நோயாக மாறும்.

காய்ச்சல் போல நாம் வாழப் பழகிக்கொண்ட மற்ற ஒரு நோயாக கொரோனா இருக்கும். அப்படி கொரோனா, காய்ச்சல் போல மாறினால் நாம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடலாம். ஆகவே தடுப்பூசி மற்றும் புதிய சிகிச்சை மூலம் கொரோனா இந்த ஆண்டுக்குள் முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |