தமிழகத்திற்குள் பாலைவன வெட்டுக்கிளிகள் வந்தால் அவற்றை அழிக்க தயார் நிலையில் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
காப்பான் திரைப்படத்தில் வரும் வெட்டுக்கிளி காட்சிகளை போல் கடந்த மாதம் முழுவதும் பாலைவன வெட்டுக்கிளிகள் வடமாநிலங்களில் இருக்கக்கூடிய பயிர்களை நாசம் செய்து வந்தது. குறிப்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இதனுடைய பாதிப்பு அதிகமாகவே காணப்பட்டது. தற்போது இந்த பாலைவன வெட்டுகிளிகளை அழிக்கும் பணியில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டு உள்ளது. அதன்படி, வெட்டுக்கிளியை அழிக்கும் பணியில் அண்ணாபல்கலைக்கழகம் வடிவமைத்த ட்ரோன்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த ட்ரோன்களில் பொருத்தப்பட்டுள்ள தெர்மல் கருவி குறிப்பாக வெட்டுக்கிளிகள் இருக்கும் இடத்தை ஸ்கேன் செய்து கண்டறிந்து அங்கே மட்டும் கிருமி நாசினி தெளித்து அவற்றை கொல்லும். தமிழகத்தில் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பதற்கு வாய்ப்பில்லை. இருந்தபோதிலும், தமிழகத்திற்குள் பாலைவனக் வெட்டுக்கிளிகள் நுழைந்தால் அவற்றை அழிக்க தயார் நிலையில் 25 ட்ரோன்கள் இருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. எனவே வட மாநிலங்களைப் போல் அவற்றின் வேலை இங்கே செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.