Categories
தேசிய செய்திகள்

“சோதனையில் தடுப்பூசி” இன்னும் 1.5 வருஷம் காத்திருக்கணுமாம்…. who தலைமை தகவல்

இந்தியாவில் பணியிலிருக்கும் கொரோனா தடுப்பூசிகள் விற்பனைக்கு வர ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பித்து சுமார் 6 மாத காலம் கடந்துவிட்ட நிலையில், இந்தியா உட்பட உலகளவில் மொத்தம் 8 தடுப்பூசி தயாரிப்பு பணிகள் அதன் வெவ்வேறு கட்டத்தில் இருந்து வருகின்றன. தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்கான ஆலோசனையின் முக்கிய பங்கு வகித்ததற்காக சிறப்பு விருதைப் பெற்றிருக்கும் செளமியா சுவாமிநாதன், இந்தியாவில் தடுப்பு மருந்து தயாரிப்பு முடிந்து விற்பனைக்கு வருவதற்கு ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகலாம் எனத் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஒரு தடுப்பூசி விற்பனைக்கு வருவதற்கு 5 முதல் 10 வருடம் வரை ஆகும் எனவும், ஆனால் உலக சுகாதார அமைப்பின் உதவியுடன் நடந்துவரும் தடுப்பூசி செயல்பாடுகள் இதை விரைவுபடுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி தயாரிக்கப்பட்டாலும் சோதனைக் காலத்துக்கு நேரமெடுக்கும் என்பதால் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என சௌமியா தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு தயார் பணிகள் மற்றும் கொரோனா நிவாரண செயல்பாடுகளுக்கு மட்டும் 6,650 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |