Categories
உலக செய்திகள்

இது படகில் பிறந்த குழந்தையா…? கடலில் தத்தளித்த புலம்பெயர்ந்தோர்…. கடலோர காவல்படை வெளியிட்ட புகைப்படம்….!!

இத்தாலிய கடலோர காவல்படையினர் கடலில் சிக்கித் தவித்த பிறந்த குழந்தை உட்பட 244 புலம்பெயர்ந்தோரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அன்று இரவு இத்தாலிய கடலோர காவல்படையினர், கலாப்ரியா கடற்கரையிலிருந்து சுமார் 50 மைல் தொலைவில் மீன் படகு ஒன்றில் கடலில் சிக்கித் தவித்த புலம்பெயர்ந்தோரை கண்டுள்ளனர். இதையடுத்து சுமார் 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த சம்பவத்தில் 41 குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும், கடல் சீற்றம் அதிகரித்த காரணத்தினால் சிக்கலான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாகவும் கடலோர காவல்படையினர் கூறியுள்ளனர்.

அதோடு மட்டுமில்லாமல் கடலோர காவல்படையினர் பச்சிளம் குழந்தை ஒன்றை மீட்ட புகைப்பட காட்சியையும் வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் அதனுடைய தாயார் பயணத்திற்கு தயாரானாரா அல்லது குழந்தை படகிலேயே பிறந்ததா என்பது பற்றிய தகவல் எதுவும் உறுதியாக தெரியவில்லை. அதேபோல் கடந்த புதன்கிழமை அன்று 27 பேர் இங்கிலாந்திற்கு செல்ல முயற்சித்த போது கலேஸ் அருகே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 244 பேர் மீன் படகு ஒன்றில் கடலில் சிக்கி தவித்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |