கொரோனோ வைரஸ் பாதிக்கப்பட்டு இத்தாலியில் ஒரேநாளில் 675 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, நேற்றைய தினம் வரை கணக்கிடுகையில்,
கொரோனோ உயிரிழப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 11,384 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் சீனாவைவிட இத்தாலியில் கொரோனோ பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் மட்டும் ஒரே நாளில் 675 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தனர். இந்த செய்தி உலக நாட்டு மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.