இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 168ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய கொரோனா வைரஸ் உலகெங்கும் வேகமாக பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் அசுர வேகத்தில் மக்களை கோர தாண்டவம் ஆடி வருகின்றது.
170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் 2,44,979 பேர் ஆக அதிகரித்துள்ளது. 10,035 பேரை காவு வாங்கிய கொரோனா வைரஸ் இத்தாலி – 3,405 , சீனா – 3,245 , ஈரான் – 1,284 , ஸ்பெயின் – 831 என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. இதனால் உலக பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.