இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில்,நடால்,பிளிஸ்கோவா , ஸ்வியாடெக் ஆகியோர் இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளனர் .
ரோம் நகரில் நடைபெற்று வரும், இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ,ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால், அமெரிக்காவை சேர்ந்த ஒபெல்காவுடன் மோதி, 6-4, 6-4 என்ற நேர் செட்டில், வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். முந்தைய நாள் நடைபெற்ற போட்டியில், மழையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் பிறகு நேற்று நடைபெற்ற போட்டியில் ,பின் தங்கிய நிலையில் இருந்த ஜோகோவிச் நேற்றைய ஆட்டத்தின் மூலம் வெற்றி பெற்றுவிட்டார்.
இதைத்தொடர்ந்து பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா, குரோஷியாவை சேர்ந்த பெட்ரா மார்டிச்சுடன் மோதி, 6-1, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ,3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸின் சாம்பியனான இகா ஸ்வியாடெக் ,அமெரிக்காவை சேர்ந்த கோகோ காப்பை எதிர்கொண்டு , 7-6 (7-3), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். எனவே இறுதிப்போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா , ஸ்வியாடெக் இருவரும் மோதிக் கொள்கின்றனர்.