இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில்,போலந்தை சேர்ந்த வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
நேற்று ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா, போலந்தை சேர்ந்த 15வது இடத்திலுள்ள இகா ஸ்வியாடெகுடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கத்திலிருந்தே, பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்வியாடெக் ஆதிக்கத்தை செலுத்தி வந்தார். ஒரு புள்ளியை கூட எடுக்க முடியாத அளவிற்கு ,அதிரடி ஆட்டத்தை காட்டினார் .
இந்த போட்டியை 46 நிமிடங்களில் முடித்து , சாம்பியனான பிளிஸ்கோவாவை தோற்கடித்து , 6-0 6-0 என்ற நேர் செட் கணக்கில் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டி ஸ்வியாடெக்-க்கு 3 வது சர்வதேச பட்டமாகும். வெற்றி பெற்ற அவருக்கு , ரூ.1½ கோடி பரிசுத் தொகையும், தரவரிசையில் 1000 புள்ளிகளும் வழங்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், ஒரு கேம் கூட விட்டுக் கொடுக்காமல், ஒரு வீராங்கனை சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.