Categories
டென்னிஸ் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி:கால்இறுதி சுற்றுக்கு ஜோகோவிச், நடால் முன்னேற்றம் …!!!

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில்  ஆண்களுக்கான பிரிவில் ஜோகோவிச், நடால் இருவரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்ற, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று போட்டியில் நம்பர் ஒன் வீரரும் ,5 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச், ஸ்பெயின்  வீரரான அலெஜான்ட்ரோ டேவிடோவிச் உடன் மோதி  , 6-2, 6-1  என்ற நேர்  செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 25% ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு முன் நடைபெற்ற போட்டியில் சிட்சிபாஸ்,  இத்தாலி வீரரான  பெரேட்டினியை எதிர்கொண்டு, 7-6 (7-3), 6-2  என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால், கனடா வீரனான டெனிஸ் ஷபோவலோவை  3-6, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் தோல்வியடையச் செய்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.  இந்த போட்டி 3½ மணி நேரம்  நீடித்தது.

இதைத்தொடர்ந்து பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி, ரஷ்ய வீராங்கனையான குடெர்மிடோவாவுடன் மோதி,  6-3, 6-3  என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதுபோல மற்றொரு போட்டியில் மாட்ரிட் ஓபன் டென்னிஸில்  சாம்பியன் பட்டத்தை வென்ற சபலென்கா, அமெரிக்க வீராங்கனையான கோகோ காப்புடன் மோதி,  5-7, 3-6  என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதைத்தொடர்ந்து பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்வியாடெக், கரோலினா பிளிஸ்கோவா  மற்றும் ஜெஸ்சிகா பெகுலா ஆகியோர் 3 வது சுற்றில்  வெற்றி பெற்றனர். இதில் நடப்பு சாம்பியனான சிமோனா ஹாலெப், ஜெர்மனி வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பருக்குடன்  மோதும்போது , காயம் ஏற்பட்டதால் போட்டியில்  இருந்து பாதியிலேயே  சிமோனா ஹாலெப் விலகினார்.

Categories

Tech |