இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ,அரையிறுதி சுற்றுக்கு நடால், பிளிஸ்கோவா முன்னேறியுள்ளனர் .
ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில்,9 முறை சாம்பியனான ரபெல் நடால் ,ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதி , 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டியின் மூலமாக,கடந்த வாரம் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ,ரபெல் நடால் காலிறுதி சுற்றில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் .இதற்கு முன் நடைபெற்ற போட்டியில் ஒபெல்கா, அர்ஜென்டினாவை சேர்ந்த பெடெரிகோ டெல்போனிசுடன் மோதி , 7-5, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
அடுத்து நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலின பிளிஸ்கோவா, ஜெலினா ஆஸ்டாபென்கோவுடன் மோதி, 4-6, 7-5, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 2 மணி 20 நிமிடங்கள் வரை நடைபெற்றது . மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி, கோகோ காப் உடன் மோதி, முதல் செட்டில் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஆனால் 2 வது செட்டில் விளையாடும்போது ,அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டதால், போட்டியிலிருந்து விலகினார். இதனால் அரையிறுதி சுற்றுக்கு கோகோ காப் முன்னேறினார்.