Categories
உலக செய்திகள்

மரணத்தால் அலறிய இத்தாலி – கொரோனாவை கட்டுப்படுத்தியது எப்படி? வெளியான தகவல் …!!

கொரோனா தொற்றுக்கு அதிக அளவு உயிர் பலியை கொடுத்த இத்தாலி தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்தது எப்படி எனும் தகவல் வெளியாகியுள்ளது

உலக நாடுகளை கொரோனா தொற்று பரவ தொடங்கி 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதிக உயிரிழப்புகளை கொடுத்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இத்தாலி தற்போது மூன்றாம் இடத்தில் வகிக்கிறது.

இதுவரை இத்தாலியில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இப்போது கொரோனா பிடியில் இத்தாலி மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. அங்கு கொடுக்கப்பட்டு வரும் ரத்த பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன் அளிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு அறிகுறிகள் இல்லாதவர்களின் உடலில் ரத்த பிளாஸ்மாவில் வைரஸை எதிர்க்கக்கூடிய அண்டிபயாடிக் தன்மை உருவாகிறது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட ரத்த பிளாஸ்மாவை நோயாளிகளுக்கு செலுத்தும் பொழுது பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோயின் தீவிரத்தை குறைக்க உதவி புரிகிறது என லம்பார்டி நகர மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

வடக்கு இத்தாலியில் பிளாஸ்மா மூலமாகவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். நோயின் வீரியத்தை பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குறைக்க முடிந்தாலும் இந்த சிகிச்சை முறை இன்னும் சோதனை அடிப்படையிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது என இத்தாலி தெரிவித்துள்ளது பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிறுவனமொன்று குணமடைந்தவர்களிடமிருந்து பிளாஸ்மா பெற்று வருகிறது. செப்டம்பர் இறுதிக்குள் பிளாஸ்மா சிகிச்சை நடைமுறைக்கு வந்துவிடும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது

Categories

Tech |