பனிமலையின் இடையே ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் கயிற்றில் நடந்து இத்தாலி வீராங்கனை சாகசம் நடத்தியுள்ளார்.
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள பொலிவியா நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு ஆண்டிஸ் மலைகளில் உள்ளது. மேலும், நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் பெரும்பாலான பகுதியும் அங்குதான் அமைந்துள்ளன. இந்த நிலையில், இத்தாலி வீராங்கனை ஒருவர் ஆண்டியன் மலைப்பகுதியில் உறைந்த சாச்சகோமனி ஆற்றின் இரு பகுதியிலும் அமைந்துள்ள பனிமலையின் இடையே கயிற்றின் மேல் நடந்து சாகசம் நிகழ்த்தியுள்ளார்.
மேலும், இந்த சாகசத்தை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17,000 அடி உயரத்தின் மேல் கயிற்றில் நடந்து வீராங்கனை சாகசத்தை நிகழ்த்தினார். அதுமட்டுமின்றி, பொலிவியாவின் லா பாஸ் என்ற நகரின் பரபரப்பான தெருக்களில் வானுயர்ந்த குடியிருப்புகளுக்கு இடையேயும் கயிற்றில் நடந்து வீராங்கனை ‘Campoleoni’ என்ற சாகசம் நடத்தி ஆச்சரியம் அடைய செய்தார்.