பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோருக்கு கிரீன் பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர் கண்டிப்பாக கிரீன் பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். மேலும் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு கிரீன் பாஸ் அவசியம் என்று கூறிய முதல் ஐரோப்பிய நாடு இத்தாலி ஆகும். அதே வேளையில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும் இத்தாலி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனையடுத்து குறைந்த பட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தினாலும் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டாலும் இல்லையெனில் அண்மையில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்தாலும் அதற்கான ஆதாரமாக அமைவது கிரீன் பாஸ் என்று அழைக்கப்படும் ‘கோவிட் பாஸ்’ ஆகும்.
இது டிஜிட்டல் அல்லது காகித சான்றிதழ் ஆகவோ காணப்படுகிறது. அதிலும் தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளிடையே எளிதாக பயணம் மேற்கொள்ள கிரீன் பாஸ் திட்டம் உருவாக்கப்பட்டது. இருப்பினும் நாட்டில் உள்ள உணவகங்கள், அருங்காட்சியங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் மக்கள் செல்வதற்கு கிரீன் பாஸ் திட்டத்தை இத்தாலி கட்டாயமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.