இத்தாலியில் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவருக்கும், அவரை விட 27 வயது குறைவான பெண் ஒருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்க உள்ள நிலையில், அதுதொடர்பாக இருவரும் பேசியுள்ளனர்..
இத்தாலியைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரர் gianluca vacchi. இவரும் 25 வயதுடைய sharon fonseca என்ற பெண்ணும் 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பிணியாக இருக்கிறார்.. இருவருக்கும் 27 வயது வித்தியாசம் இருப்பதால் பலரும் விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் இவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.
இது குறித்து பேசிய கோடிஸ்வரர் gianluca vacchi, எங்களுக்கிடையே அதிக வயது வித்தியாசம் இருப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. என்னதான் எனக்கு தாடி வெள்ளை நிறமாக இருந்தாலும் என்னிடம் 15 வயது சிறுவனிடம் உள்ள ஆற்றல் இருக்கிறது.
எங்களது காதல் ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. ஏனென்றால் அவள் என்னை மிகவும் கஷ்டப்படுத்தினாள். நான் இரவில் அவளை சந்தித்த போது அவர் என் வலையில் விழுவாள் என்று நினைத்தேன். ஆனால் அது தவறு என்று எனக்கு பின்னரே தெரிந்தது எனக் கூறினார்.
இதுகுறித்து sharon கூறுகையில், ஒரு திறந்த புத்தகம்.. அவரிடம் இருந்து நான் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான ஒன்றை கற்றுக் கொள்ள முடியும். அவரிடம் 15 வயது சிறுவனிடம் உள்ள ஆற்றல் இருப்பது உண்மை தான். நாங்கள் பெற்றோர்கள் ஆவோம் என்று எதிர்பார்க்கவில்லை.இதனால் நாங்கள் இருவரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறோம்.. எனக்குள் இன்னொரு உயிர் வளர்ந்து வருவது அதிசயமாக இருக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்..