மிச்செலின் ஸ்டார் செஃப் பிலிப் கான்டிசினி, ஃபேபெல்லின் மாஸ்டர் சாக்லேட்டியர் இணைந்து ‘டிரினிட்டி – ட்ரஃபிள்ஸ் எக்ஸ்ட்ராஆர்டைனெய்ர்’ என்ற புது வகையான சாக்லெட்டை தயாரித்துள்ளது.
அந்த சாக்லேட்டின் விலை கிலோ ஒன்றுக்கு சுமார் ரூ. 4.3 லட்சம் என்று நிர்ணயம் செய்து அதை ஐ.டி.சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ஐடிசியின் சாக்லேட், காபி உணவுப்பிரிவின் தலைமை இயக்க அலுவலர் அனுஜ் ருஸ்தகி , “இந்திய சாக்லேட் சந்தையில் மட்டுமல்ல, இப்போது உலக அளவிலும் கின்னஸ் சாதனையை எட்டியதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.