ஆப்பிள் சிலிகான் பிராசஸர் உள்ளடக்கிய லேப்டாப் மாடல்கள்இந்த வருடத்தின் இறுதியில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.
சமீபத்தில் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் சிலிக்கான் பிரவுசர் கொண்ட லேப்டாப் மாடல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது 13.3இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் மாடல்களை புதிய ஆப்பிள் சிலிக்கான் பிராசஸ்சர்களுடன் இந்த வருடம் அறிமுகம் செய்வதாக கூறி இருந்தது. புதிய13.3 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் இப்போதுள்ள மாடலை போன்று காட்சியளிக்கும் என்றும் ஏஆர்எம் சேர்ந்த ஆப்பிள் சிலிகான் சிப்செட் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதுபோன்ற மேக்புக் ஏர் மாடலிலும் ஆப்பிள் சிலிகான் ப்ரசஸர் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனமானது 14.1 இன்ச் மாடலை அப்டேட் செய்து 13.3 இன்ச் மாற்றி அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.இதனுடன் எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மினி எல்இடி டிஸ்ப்ளே 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலிலும் வழங்கப்படலாம். இரண்டு மாடல்களில் ஆப்பிள் ஏஆர்எம் சார்ந்த ஆப்பிள் சிலிகான் ப்ராசசர் வழங்கப்படும் என்றும் இவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.