Categories
மாநில செய்திகள்

இதை கட்டாயம் செய்யணும்…. தமிழக அரசு பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது .அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதன் முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்ய தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை நாள் வருகிறது. அந்நாளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக கிராம சபை கூட்டங்களுக்கு அரசு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதால் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு கிராமசபை கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அந்தக் கூட்டத்தில் கிராமத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கான ஆலோசனை மேற்கொள்வர்.

மேலும் கிராமசபை கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டால் சிறப்பானதாக இருக்கும் என்று மாநில அரசு கூறுகிறது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஒருங்கிணைத்து பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ரா.சுதன் அறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் கொரனோ பரவலின்  காரணமாக தொடக்கப்பள்ளிகள் திறக்காமல் மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவு ஏற்பட்டுள்ள நிலையில்’ மக்கள் கல்வி’ என்ற திட்டத்தை அரசு வெளியிட்டது.இதில் 1 முதல்1.30 மணி நேரம் வரை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

அதனை தொடர்ந்து நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் ‘மக்கள் பள்ளி’ என்ற திட்டத்தை ஆலோசனை செய்யப்படும். மேலும் அந்த கிராம சபை கூட்டத்தில் முதன்மை மாவட்ட வட்டார கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து நிலை கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கைகளை முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |