Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை மீறினால் அவ்ளோதான்…. அதிகாரிகளின் திடீர் ஆய்வு… வியாபாரிகளுக்கு எச்சரிக்கை…!!

முழு ஊரடங்கின் போது கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்ததால் அதிகாரிகள் ரூபாய் 15,200 அபராதம் வசூலித்ததோடு அவர்களை  எச்சரித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுபாஷினி அதிகாரிகளுடன் முழு ஊரடங்கையும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கின்றனரா இல்லையா என்பதை கண்டறிய திடீரென ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் அரசு உத்தரவை மீறி இறைச்சி, மீன் போன்ற 8  கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

இதனைப் பார்த்த அதிகாரிகள் உடனடியாக கடையின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 5,000 அபராதம் விதித்து மொத்தம் 15,200 ரூபாய் வசூலித்துள்ளனர். மேலும் அந்தக் கடைகளில் ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்ததால் அவர்களிடம் கொரோனா தொற்று அதிகம் பரவ அபாயம் உள்ளதாக கூறி சமூக இடைவெளியை பின்பற்றாமல்  இருந்தவர்களிடம் ரூபாய் 200 அபராதம் வசூலித்துள்ளனர். இதனையடுத்து நகராட்சி ஆணையர் சுபாஷினி மீண்டும் அரசு நெறிபடுத்திய விதிமுறைகளை மீறி இறைச்சிக் கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்தால், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Categories

Tech |