Categories
உலக செய்திகள் பல்சுவை

இதை செய்யாவிட்டால் ஊழியர்கள் உடனே பணி நீக்கம்…. கூகுள் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

கொரோனா தடுப்பூசி விதிமுறைகளை ஊழியர்கள் பின்பற்றாமல் இருந்தால் அவர்கள் பணி நீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும், அதன்படி தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் வரும் ஜனவரி மாதம் 18-ஆம் தேதி முதல் 30 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அனுப்பப்படுவார்கள் என்றும், அதன்பின்னர் சம்பளம் இல்லாத விடுப்பில் 6 மாதங்களுக்கு வைக்கப்பட்டு, பின்னர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து மருத்துவ மற்றும் மதரீதியான காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாதவர்கள் முறையாக விண்ணப்பித்து விலக்கு பெறலாம் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |