Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…!! 2000 வருசத்துக்கு முன்னாடி இருந்த தேர்… கண்டுபிடித்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்…!!

தெற்கு இத்தாலியில் 2000 ஆண்டுகள் பழமையான தேரை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தெற்கு இத்தாலியில் உள்ள pompeii என்ற நகருக்கு அருகில் உள்ள வில்லாவில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது அவர்கள் 2000 ஆண்டுகள் பழமையான நான்கு சக்கர தேர் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த தேரானது வெண்கலம் மற்றும் தகரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் மூன்று பழங்காலத்து குதிரை வண்டிகளையும் கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தேரை செய்ய ரோமானிய காலத்து ஓக் மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேரானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவிழாக்கள் மற்றும் அணி வகுப்புகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதற்கு முன்பு இத்தாலியில் இந்தவகை தேர் கண்டுபிடிக்கப்பட்டதே இல்லை என்றும்  ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே நகரத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பான சிற்றுண்டி கடை, ஓவியங்கள் போன்றவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |