இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ரசிகர்களிடம் அமைதியாக இருங்கள் இதையும் கடந்து செல்வோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்திப் படவுலகில் வாரிசுகளின் ஆதிக்கம் இருப்பதும், வெளியில் இருந்து வருபவர்களை வளரவிடாமல் தடுப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரகுமானுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஹாஸ்டேக்செய்து ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்களில் பலர் ஏ.ஆர் ரகுமானுக்கு எதிராக செயல்படும் இந்தி திரையுலகினரை விமர்சித்து வருகின்றனர்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி இயக்குனர் சேகர் கபூர் ” நீங்கள் ஆஸ்கர் விருது பெற்று விட்டது தான் பிரச்சனை. இந்தி பட உலகிற்கு அது பெரிய தோல்வி இந்தி திரையுலகை விட நீங்கள் பெரிய புத்திசாலி என நிரூபிக்கப்பட்டுள்ளது ” என தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏ.ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் “பணத்தை இழந்தால் சம்பாதித்து விடலாம். புகழை இழந்தாலும் சம்பாதிக்கலாம். நேரத்தை இழந்தால் அதை ஒரு போதும் திரும்பபெர இயலாது. அமைதியாக இருங்கள் இதை கடந்துசெல்வோம். நாம் செய்வதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது” என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.