Categories
சினிமா தமிழ் சினிமா

‘இதனால் தான் நான் வெளியே செல்வதில்லை’… ‘விஸ்வாசம்’ அனிகா வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு…!!!

‘விஸ்வாசம்’ பட நடிகை அனிகா அதிகம் வெளியே செல்லாததற்கான காரணத்தை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இதையடுத்து நானும் ரவுடிதான், மிருதன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பின் இவர் மீண்டும் நடிகர் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் அசத்தலாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது அனிகா விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை அனிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ‘நான் விஸ்வாசம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக என்னை பலரும் பாராட்டுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் நான் மிகவும் உயரம் குறைவாக இருக்கிறேன் என்றும் இன்னும் நான் வளர வேண்டும் என்றும் பலர் கூறுகின்றனர். இதனால்தான் நான் அதிகமாக வெளியே செல்வதில்லை’ என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |