ராணுவ போக்குவரத்து விமானம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இத்தாலிய பாதுகாப்புத்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பியா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆப்கானில் தங்கியுள்ள அனைத்து படைகளும் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று தலீபான்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையில் காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தவுள்ளதாக நம்பத்தகுந்த உளவுத்துறையில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை பிரித்தானியா ஆயுதப்படை அமைச்சரான ஜேம்ஸ் ஹெப்பி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று காபூல் விமான நிலையத்திலிருந்து இத்தாலிய ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று 1௦௦ ஆப்கானியர்களுடன் புறப்பட்டுள்ளது. இதனையடுத்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதனை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அதில் பயணித்த இத்தாலிய பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்த தகவலை இத்தாலியின் பாதுகாப்புத்துறை அமைச்சரகம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக விமானத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.