தமிழர்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நடனக் ஆனது என்று இந்தியா பரிந்துரை செய்துள்ளது.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 46 ஆவது கூட்டத்தொடர் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே ஜெனிவாவில் இலங்கை மீதான ஐநா மனித உரிமை பேரவையை பற்றி விவாதித்தார். மேலும் “தமிழர்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலனுக்கானது என்று இந்தியா பரிந்துரைத்துள்ளது”என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் “இலங்கை தொடர்பான ஐக்கிய நாடு மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை மற்றும் அவரது கருத்துக்களை இந்தியா எப்பொழுதும் கவனத்தில் வைத்திருக்கும் என்று கூறினார்.
இந்நிலையில் இலங்கையுடன் நெருங்கிய நட்பு கொண்டு உள்ளதாலும் பக்கத்து நாடு என்ற வகையிலும் இந்தியா தொடர்ந்து உறுதிபாடுகளுடன் செயற்படுகிறது. இலங்கை தொடர்பான இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடானது இரு தூண்களில் உள்ளது. இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு, சமத்துவம் ,நீதி,அமைதி, கௌரவத்திற்கான இலங்கை தமிழர்களின் விருப்பங்களுக்கு வாக்குறுதி அளித்தல் என இரு பிரதான தூண்களை மையப்படுத்தியே இந்தியா மற்றும் இலங்கையின் நிலைப்பாடு உள்ளது.
தமிழ் சமூகத்தின் உரிமைகளை மதிப்பது அதிகாரப்பகிர்வு இலங்கை ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் பங்களிப்பதை உறுதியாக நம்பி உள்ளோம். இலங்கை மீதான ஜநா பேரவை விவாதத்தில் இந்தியா தரப்பில் சில கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவை நல்லிணக்க செயல்முறை மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் . இத்தகைய விருப்பங்களுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை நிறைவேற்ற இலங்கையை கேட்டுக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்