நன்னீரில் வாழக்கூடிய நட்சத்திர ஆமைகள் கடற்கரையில் இறந்து கிடந்தது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை மீன்கள், ஆமைகள் போன்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த கடல் பகுதியில் வாழ்ந்த பல அரியவகை உயிரினங்கள் அழிந்து விட்டது. இதனை அறிந்த உயிர்கோளக் காப்பக வனத்துறையினர், வன உயிரின சட்டத்தின்படி கடலில் வசிக்கும் அரிய வகை உயிரினங்களை தனித்தனியாக பிரிக்கப்பட்டு அவைகளை பாதுகாத்து வருகின்றனர். இதனையடுத்து உயிர்க்கோளக் காப்பக வனத்துறையினர் வகைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை பிடிப்பது தவறு என்று விழிப்புணர்வை அப்பகுதி மீனவர்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெரியசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள கடற்கரைக்கு சில மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அந்த கடற்கரை பகுதியில் சில நட்சத்திர ஆமைகள் இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து மீனவர்கள் உயிர் கோளக் காப்பக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி உயிர்க்கோளக் வனத் துறையின் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது கால்நடை மருத்துவர்கள் இறந்த நட்சத்திர ஆமைகளை பரிசோதனை செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உயிர்க்கோளக் காப்பக வனத்துறையினர் நன்னீரில் வாழக்கூடிய நட்சத்திர ஆமைகள் எவ்வாறு கடற்கரைப் பகுதியிலிருந்து இறந்து கிடக்கும் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.