பிரித்தானிய நாட்டில் மக்களிடம் கொரோனா தடுப்பூசியை கொண்டு சென்றது மிகப்பெரிய சாதனை என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் இன்று 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாக தெறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரித்தானியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வந்துள்ளது. மேலும் இந்த மாதம் முதல் பிரித்தானியாவில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது சுமார் 5 லட்சம் மில்லியனுக்கு அதிகமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி அடுத்த வாரம் விரைவில் வழங்கப்படும் என கூறியுள்ளனர். இதுவரை வாரத்திற்கு சராசரியாக 2.5 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது . தடுப்பூசி அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் MATT HANCOCK பிரித்தானியாவில் இதுவரை 2 லட்சம் மக்களுக்கு குறைந்தது முதல் டோஸ் தடுப்பூசி வழங்கியுள்ளதாக அறிவித்தார்.
இவ்வளவு வேகமாக மக்களிடம் தடுப்பூசியை கொண்டு சென்றதற்காக பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜான்சன் “மிகப் பெரிய தேசிய சாதனை” என்று பெருமிதம் அடைந்தார். தடுப்பூசி திட்டத்திற்கு பணியாற்றிய NHS தன்னார்வலர்கள் மற்றும் ஆயுத படைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். பிரதமர் போரிஸ் ஜான்சன்ஸின் வாக்குறுதிப்படி ஜூலை மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.