Categories
தேசிய செய்திகள்

“இது நடந்தால்” கிராமங்களில் அரசுப்பள்ளிகள் கட்டப்படும்….. கெஜ்ரிவால் உறுதி…!!!

குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது கடந்த 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் இந்த முறை ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் முனைபுடன் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பஞ்சாபில் தனது தேர்தல் அறிக்கை யுக்தியால் ஆத்மி கட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது அதனை போல குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜரிவால் தொடர்ச்சியாக குஜராத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகிய இருவரும் குஜராத்துக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அங்கு கட்ச் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய கெஜரிவால், டெல்லியில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற்று வருகின்றன. அவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தவுடன் தங்கள் குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டெடுப்பார்கள். ஆனால் குஜராத்தில் ஆளும் பாஜக கட்ச் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை மூடி வருவதாக அறிவித்தேன். ஆம் ஆத்மி கட்சிக்கு வந்த பிறகு குஜராத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் அரசு பள்ளிகள் கட்டப்படும் என்று உறுதி அறிந்தேன். கட்ச் பகுதியின் மூலை முடுக்கலாம் நர்மதா நீரை கொண்டு வருவோம். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |