பிக் பாஸில் நேற்றைய எபிசோட் குறித்து ரம்யா பாண்டியனின் தம்பி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே இருக்கிறது . இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் போட்டியாளர்கள் அதிரடியாக விளையாண்டு வந்தனர். அதிலும் நேற்றைய எபிசோடில் கயிற்றை அதிக நேரம் பிடித்துக் கொண்டிருக்கும் டாஸ்க்கில் ரம்யா மற்றும் சிவானி கடைசிவரை போராடினர்.
இந்த எபிசோடை பார்த்த பிக் பாஸ் ரியோவின் மனைவி ஸ்ருதி ‘யூ கோ கேர்ள்ஸ் அவர்களுக்கு கடினமான போட்டியாளர்களாக நீங்கள் இருங்கள் . இந்த எபிசோடை நான் மிகவும் நேசிக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘இது போதும் நீ ஆல்ரெடி ஜெயிச்சுட்ட மாரா, பாடல் போட்ட பிக் பாஸுக்கு நன்றி . சிவானி நீங்களும் வேற லெவல் ‘ என பதிவிட்டுள்ளார் .