சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இலுப்பையூரணி பகுதியில் தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்த காவல்துறையினர் அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் வினோத்குமார் என்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் அந்த வாலிபர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக வினோத்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.