சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மூன்று வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆவேரிக்கரை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் 3 பேர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்து அவர்களை கையும், களவுமாக காவல்துறையினர் பிடித்து விட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் அந்த மூன்று பேரிடம் நடத்திய விசாரணை அவர்கள் ஒக்கநந்தம் பகுதியில் வசிக்கும் சின்னராசு, பாரதிதாசன் மற்றும் பிரபாசங்கர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 600 கிராம் எடை கொண்ட கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.