மணல் கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்ததோடு லாரியை பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னக்காயல் பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் மணல் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சிவலப்பேரி பகுதியில் வசிக்கும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல் துறையினர் சரவணன் கடத்திச் சென்ற மணல் மற்றும் லாரியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய குற்றத்திற்காக சரவணனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.