தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அமுதா நகர் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை விற்பனை செய்கிறார்கள் என்ற காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது அங்கு இரண்டு வாலிபர்கள் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்து அவர்களை கையும், களவுமாக பிடித்து விட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சின்னத்துரை மற்றும் அருணாச்சலம் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல் துறையினர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற குற்றத்திற்காக 2 வாலிபர்களையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.