ரயிலில் அடிபட்டு வாலிபர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இலுப்பையூரணி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பிறகு காவல் துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் இறந்த வாலிபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி எந்த விபரமும் யாருக்கும் தெரியவில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்த வாலிபர் யார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா போன்ற விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.