மணமகளின் காலில் மணமகன் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது.
இந்திய கலாச்சாரப்படி ஒவ்வொரு திருமணமும் ஒவ்வொரு விதமாக நடைபெற்று வருகின்றது. பல திருமணங்களில் மணமகனின் காலில் மணமகள் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது வழக்கம். ஆனால் இங்கு ஒரு வீடியோவில் மணமகள் காலில் மணமகன் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறான். அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். இதனை டாக்டர் அஜித் வர்வாந்கர் என்பவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
वरमाला का कार्यक्रम पूरा हुआ तो दूल्हे ने दुल्हन के कदमों में अपना सर झुका दिया तो शादी समारोह में उपस्थित समस्त घराती और बाराती स्तब्ध रह गये।
दूल्हे ने जवाब दिया:
1. मेरी वंश को यही आगे बढ़ाएगी
2. मेरे घर की लक्ष्मी कह लाएगी
(1/4) pic.twitter.com/vy2CkuszLO— Dr. Ajit Varwandkar (@Varwandkar) May 29, 2021
இந்தியில் உள்ள இந்த பதிவின் தமிழ் விளக்கத்தை இதில் நாம் தெரிந்துகொள்வோம்.
என் சந்ததியை உருவாக்க போகிறவள்.
என் பெற்றோரை அவரது பெற்றோரை மதிக்க போகிறவள்.
என் வீட்டிற்கு லட்சுமியை கொண்டு வரப் போகிறவள்.
பிரசவத்தின் போது என் குழந்தைக்காக மரணத்தை தொட்டு திரும்ப போகிறவள்.
என் வீட்டிற்கு அஸ்திவாரமாக இருக்கப் போகிறவள்.
என் பெற்றோருக்கு பின் என்னுடன் இருக்க போகிறவள்.
அவள் நடத்தையால் சமூகத்தில் எனக்கான அங்கீகாரத்தை தரப்போகிறவள்.
எனக்காக அவளது பெற்றோரை பிரிந்து வரப்போகிறவள்.
இதையெல்லாம் எனக்காக செய்யும் அவளுக்காக நான் இந்த மரியாதையை கூட செய்ய மாட்டேனா? இதில் வெட்கப்பட என்ன உள்ளது என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த கருத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.