முன்விரோதம் காரணமாக மாமனார்களுக்கு இடையே நடந்த தகராறில் மருமகன் வெட்டுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேவாமங்கலம் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தனது தம்பியான ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செல்வராஜின் மருமகனான மணிகண்டன் தனது இரு மாமனார்கள் தகராறில் ஈடுபடுவதைக் கண்டு அவர்கள் இருவருரையும் தடுக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது ராஜேந்திரனும் அவரது மகனான பிரபு என்பவரும் இணைந்து எங்களது சொத்துத் தகராறில் தலையிட நீ யார் என்று கூறி கோபமடைந்து அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து மணிகண்டனை தலையில் வெட்டி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அவரது மாமனார் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி ராஜேந்திரன் மற்றும் பிரபுவின் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.