சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கழுமங்கலம் பகுதியில் மணிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனும் அந்த சிறுமியும் நெருங்கிப் பழகியதால் அவர் 3 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். இதனையடுத்து அந்த சிறுமி நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினர் உடனடியாக பாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகேயன் என்பவர் அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார் .