டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் 100 விக்கெட் கைப்பற்றி ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார் .
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது .அதோடு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. அதோடு இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாகவே இருந்ததால்தான் தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய அணியால் வீழ்த்த முடிந்தது .இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவின் கோட்டையான செஞ்சூரியனில் தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் முகமது ஷமி எட்டு விக்கெட்டும் , பும்ரா இரண்டு இன்னிங்சில் தலா 2 விக்கெட் என மொத்தம் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 105 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இந்த 105 விக்கெட்டில் 101 விக்கெட்டுகள் வெளிநாடுகளில் கைப்பற்றியதாகும். இதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா தனித்துவமான புதிய சாதனையை படைத்துள்ளார் .இதில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெளிநாடுகளில் 100 விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார் இதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீர் 118 விக்கெட் கைப்பற்றி வெளிநாடுகளில் 100 விக்கெட் கைப்பற்றினார். தற்போது அந்த சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.