மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலமாக மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள Apprentice பணிகளை நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
பணி: Apprentice
காலியிடங்கள் : 2532
வயது வரம்பு : 18 முதல் 24வரை
கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் National Trade Certificate / ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேர்வு செய்யும் முறை :
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10-ஆம் வகுப்பு மற்றும் ITI – ல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
https://www.rrccr.com/TradeApp/Registration/Index
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச் 5