ஐடிஐ மாணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்னம்பட்டு கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திதாசன் என்ற மகன் உள்ளார். இவர் ஐடிஐ படித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி செய்யாறில் இருந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சிறுங்கட்டூர் கிராமத்தில் வசிக்கும் அபினேஷ், யுவராஜ் ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக சக்திதாசனை பேருந்தை விட்டு கீழே இறக்கி ஆபாசமாக திட்டி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சக்திதாசன் மோரணம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அபினேஷ், யுவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.