உலகிலேயே இட்லிதான் சலிப்பான உணவு என பிரிட்டன் பேராசிரியரின் ட்விட்டர் பதிவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் இட்லி பிரியர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த வரலாற்று பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் டுவிட்டரில் இந்தியாவின் தென் மாநிலங்களில் வசிக்கும் மக்களின் விருப்ப உணவான இட்லி தான் உலகிலேயே சலிப்பான உணவு வகை என பதிவிட்டார். இதற்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ட்விட்டரில் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி சசி தரூரின் மகன் இஷான் தரூரு விமர்சனம் செய்தார். இதையடுத்து சசி தரூரு களத்தில் இறங்கினார். இது குறித்து அவர் பதிவிட்ட டுவிட்டரில் இட்லியின் சுவையை பாராட்டுவதற்கும் கிரிக்கெட்டை ரசிப்பதற்கு மான திறன் எல்லோருக்கும் இருக்காது என்றும் வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கும் இந்த மனிதரைப் பார்த்து பரிதாபப்படு மகனே என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ஆண்டர்சன் வெளியிட்ட பதிவில் எதிர்பாராத விதமாக இந்திய மக்களை கோபமடைய வைத்துவிட்டேன் என்றும் தன் மீதான விமர்சனங்களுக்குப் பிறகு மதிய வேலைக்கு இட்லியை ஆர்டர் செய்து சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.