டாஸ்மாக் டோக்கன்களை முறைகேடாக விற்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மதுபானம் விற்பனை கடைகளை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை 8 மதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. உத்தரவை தொடர்ந்து மதுபான கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டன. மேலும், மதுக்கடைகளில் மது வாங்க ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது.
மேலும் சென்னையில் அதிகமாக கொரோனா வைரஸ் இருப்பதன் காரணமாக அங்கு கடைகள் திறக்கப்படவில்லை. மேலும், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருசில மதுபான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மதுபிரியர்கள் டோக்கனை காண்பித்தால் மட்டுமே மதுக்கடைகளில் மதுபானங்கள் வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே ஊத்துக்காடு என்ற பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் மதன்குமார் இவர் கள்ளத்தனமாக டோக்கன் விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
அந்த நபர் ஒரு டோக்கனை ரூ.400 வரை விற்பனை செய்துள்ளார். ஒரு டோக்கன் பெற்ற நபர் எத்தனை மதுபாட்டில்கள் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தது. மேலும் காலை 10 மணி முதல் மலை 7 மணி வரை மதுபான கடைகள் திறந்து வைக்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை பயன்படுத்தி கள்ள சந்தையில் டோக்கன் விற்பனை நடைபெறுவது அதிகரித்து வருகிறது.