Categories
உலக செய்திகள்

இது எங்களோட பாடல்…. நீங்க இதை பாடக்கூடாது…. ட்ரம்ப்பை எச்சரிக்கும் நிறுவனம் …!!

‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ எனும் இசை நிறுவனம் அனுமதியில்லாமல் தங்களின் பாடல்களை  பயன்படுத்தியது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரப்புரை ஆற்றும் போது, சில தன்னுரிமை பெறாத பாடல்களை பயன்படுத்தியுள்ளது  அம்பலமானது. இது தொடர்பான புகார்களை ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ எனும் இசை நிறுவனம் டிரம்பின் மீது அடுக்கியுள்ளது.

இதை தொடர்ந்து,அனுமதியில்லாமல்  தங்களின் பாடல்களை பயன்படுத்தியதால் சட்டரீதியிலான நடவடிக்கைகளுக்கு அதிபர் ட்ரம்ப் உட்பட வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது.மேலும் ,பிரபலமான ரோலிங் ஸ்டேன்ஸின்”யூ காண்ட் ஆல்வேஸ் கெட் வாட் யூ வாண்ட் ” என்ற பாடலை ட்ரம்ப் அதிகமுறை அவரின் பரப்புரையின் போது பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது .

மேலும் சமீபத்தில் ஒக்லகோமாவின் துல்சாவில் நடைபெற்ற ஒரு நிகழ்விலும் இந்த பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |