Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி விஜய் கிட்ட இருந்து அத திருடனும்” பார்க்க பார்க்க வியப்பா இருக்கு…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் சாதனை புரிந்தது. தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்று அழைக்கப்படும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு மற்றும் ஷாம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தன்னுடைய 67-வது படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பிகில் படத்தில் நடித்த நடிகை இந்துஜா தளபதி விஜய் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தளபதி விஜய் எவ்வளவு பெரிய ஸ்டார். ஆனால் தான் ஸ்டார் என்பதை யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் மிகவும் எளிமையாக பழகுவார். எல்லோருக்குமே சமமான மரியாதை கொடுப்பார். அது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும். இதுபோன்ற பல விஷயங்களை தளபதியிடமிருந்து திருட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை இந்துஜாவின் பேட்டி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |