தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் த்ருஷ்யம் 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படவிழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், ஸ்ரேயா தன்னுடைய கணவரான ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் மற்றும் தொழிலதிபர் Andrei koscheev என்பவருடன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது பொது இடத்தில் வைத்து நடிகை ஸ்ரேயா தன்னுடைய கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நடிகை ஸ்ரேயா பகிர நெட்டிசன்கள் பலரும் 40 வயதில் பொது இடத்தில் செய்ற வேலையா என்று வறுத்தெடுத்தனர். இந்நிலையில் நடிகை ஸ்ரேயா லிப் லாக் முத்தம் தொடர்பான சர்ச்சைக்கு தற்போது ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, இது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. ஸ்பெஷலான நேரத்தில் முத்தம் கொடுப்பது நார்மல் என என்னுடைய கணவர் நினைக்கிறார். மிகவும் நேச்சுரலான ஒரு விஷயத்துக்கு எதற்காக ட்ரோல் செய்கிறார்கள் என்பது எனக்கும் என்னுடைய கணவருக்கும் புரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் நடிகை ஸ்ரேயாவின் பேட்டி தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram