முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அறிகை குறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், அதை நானும் முழுவதுமாக படிக்கவில்லை. இருந்தாலும் தொலைக்காட்சிகளில், ஊடகங்களில் வருவதை பார்த்தேன்.
இந்தியாவிலேயே பெரிய மருத்துவ நிறுவனம் எய்ம்ஸ். மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே பெரிய ஒரு மருத்துவமனை, அங்கே இருந்து சுப்ரீம் கோர்ட் ஆர்டர் படி, மருத்துவர்கள் நிபுணர்கள் வந்து அவர்கள் கொடுத்த கருத்துக்களை ஆணையம் நிராகரித்து இருக்கிறது, இது வந்து ஆச்சரியமாக இருக்கிறது. அதே மாதிரி அப்பல்லோ மருத்துவமனை என்பது நமக்கெல்லாம் ஒரு பெருமை சேர்க்கின்ற தமிழ்நாட்டை சேர்ந்த சென்னையில் உள்ள மருத்துவமனை.
அவர்கள் மீதும் புகார்கள், திருமதி சசிகலா, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் இவர்களெல்லாம் அரசியல்வாதிகள் அதனால் அவர்கள் மீதெல்லாம் குற்றம் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் இது அரசியல் காரணத்திற்காக அமைக்கப்பட்ட ஆணையம் என தெரிவித்தார்.