நாமக்கல் மாவட்டத்தில் புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கு கொண்டாட சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி புது மாப்பிளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் ஏரகாடு தோட்டம் பகுதியில் தீபக்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரூர் மாவட்டத்தில் ஒரு காகித அலையில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாதம் முன்பு தீபக்கிற்கும் மகிமா(25) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு அருகே உள்ள காவிரி ஆற்றுக்கு குடும்பத்துடன் சென்றிருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆற்றில் முளைப்பாரி விட்டுவிட்டு தீபக், அவரது அக்கா பரணி மற்றும் அக்கா குழந்தை வைஷ்ணவி ஆகியோர் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது பரணி மற்றும் அவருடைய மகன் வைஷ்ணவி இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனைப்பார்த்த தீபக் அவர்களை காப்பாற்றிய நிலையில் எதிர்பாராத விதமாக தீபக் ஆற்றில் முழ்கியுள்ளார். அதிலிருந்து அவரால் மீண்டு கரைக்கு அவரை முடியாமல் தவித்துள்ளார். மேலும் இதை பார்த்து கரையில் நின்றுகொண்டிருந்த தீபக் மனைவி மகிமா மற்றும் அவரது தாய் ஜோதி ஆகியோர் அவரை காப்பாற்றும்படி அலறியுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆற்றில் குதித்து தீபக்குமாரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
ஆனால் அவர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். இதனையடுத்து சுமார் 1மணி நேரம் தேடுதல் வேட்டைக்கு பிறகு தீபக்குமாரின் உடல் ஆற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஜோடர்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீபக்குமாரின் உடலை பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தீபக்குமாரின் உடலை பார்த்து தாய் மற்றும் மனைவி கதறி அழுதது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.