செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ஒரு தனி மனிதனுக்காக ஜால்ரா அடிப்பதற்காக காலையிலிருந்து இரவு வரை அமைச்சர்களுக்கு ஒரே வேலை. இவரை புகழ்வது, இந்த மாதிரி வார்த்தை எல்லாம் சொல்வது. இன்பநதிக்கும் ஓஹோ சொல்வோம்… ஆஹா சொல்வோம் என்று கே.என் நேரு அவர்கள் சொல்கிறார்.
எங்கே இருக்கிறது ? இவர்கள் 1917-இல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இயக்கத்தை ஆரம்பித்து அதன் பின்பு, திராவிட கழகம் – ஜஸ்டிஸ் பார்ட்டி அதற்கு முன்பு… 1949 இல் திமுக, இது எல்லாம் இவர்கள் எடுத்து திரும்பி பார்த்து படிக்க வேண்டும் என்ன சொன்னீர்கள் ? என்ன செய்கிறீர்கள் என்று ? உண்மையாகவே இதை கேட்பதற்கு துரதிஷ்டவசமாக இருக்கிறது. ஆகவே என் கருத்தை சொல்லல… இவர்கள் சொன்ன கருத்தை எல்லாம் உங்களுக்கு படித்த காட்டுகிறேன், இன்றைக்கு தமிழகம் அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது.
உள்ளாட்சி தேர்தலை பொருத்தவரை உங்களுக்கு தெரியும். லோக்கல் லீடர்ஷிப், லோக்கல் ஆட்கள் அவர்கள் போய் நிற்பதற்கு ஒரு வாய்ப்பு. நமக்கு தெரியும், சில இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் ஆளுங்கட்சி பணம் வைத்து விளையாடுவார்கள், சில இடங்களில் உள்ளாட்சி தேர்தலில் நாம் பங்கேற்று இருக்கிறோம், கட்சியினுடைய தலைமை ஆராய்ந்து முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.