Categories
உலக செய்திகள்

கொரோனா ட்ரைலர் தான்…. 2060இல் காத்திருக்கும் பேராபத்து….. பில்கேட்ஸ் கருத்து….!!

கொரோனாவை விட மிகப்பெரிய ஆபத்து எதிர்காலத்தில் காத்திருப்பதாக பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் கையில் எடுத்த ஒரே ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான். இந்த ஊரடங்கு உத்தரவால், பல நாடுகள் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பிரபல தொழிலதிபரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில், கொரோனாவை விட பெரிய ஆபத்து எதிர்காலத்தில் நிகழவுள்ளது. பருவநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக தற்போது மாறி வரும் நிலையில், இதனுடைய பாதிப்பை 2020ஆம் ஆண்டுக்குள் நாம் சந்திப்போம் இது பெரிய அளவிலான பொருளாதார இழப்புகளையும், பாதிப்புகளையும் மக்களிடையே ஏற்படுத்தும். எனவே இதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை நாம் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்

Categories

Tech |