Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு வைரல்

“இது சும்மா டிரெய்லர் தான்மா , மெயின் பிக்சர பார்க்கலயே” ஹர்பஜனின் அட்டகாசமான பாடல்…!!

இந்திய அணியின் ஸ்பின் பௌலர் ஹர்பஜன் சிங் தமிழில் பாடல் பாடி , ட்வீட் செய்து அசத்தியுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

IPL போட்டி தொடங்கிய நாள் முதல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தினமும் இந்திய வீரர்களை காணலாம் என்ற நம்பிக்கையோடு TV முன்பாக அமர்ந்து IPL போட்டியில் எந்த அணி விளையாடினாலும் பார்த்து ரசித்து கொண்டாடி வருகின்றோம். இந்திய வீரர்களும் ரசிகர்களை போலவே IPL தொடரை கொண்டாடி வருகின்றனர்.இவர்களுடன் இணைந்து அயல்நாட்டு வீரர்களும் இந்த கொண்டாட்டத்தில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகளை நாம் காணமுடியும்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சென்னை வாசியாகவே குறிப்பாக தமிழ் மொழியை கற்றுக்கொண்டு , தமிழ் பாடல்களை படித்து , தமிழ் மொழியை பேசி IPL தொடரில் ஒரு தமிழனாக மாறிவிட்டார். ஏற்கனவே CSK அணிக்காக ட்வீட் பதிவிடும் போதும் , சென்னை அணிக்காக பேசும் போதும் தமிழையே பயன்படுத்தி வருகின்றார். இந்நிலையில் இன்று அவர் தமிழில் ஒரு பாடலை படித்து வீடியோ வெளியிட்டுள்ளார் . அதில் இது சும்மா டிரெய்லர் தான்மா இன்னும் மெயின் பிக்சர பார்க்கலயே என்று அசத்தியுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள ட்வீட்_டில் , அன்பால் நிறைந்த ஆனந்தங்கள் ஆயிரம்,அதற்கு எல்லைகள் ஏதும் இல்லை என்பதற்கு இதுவே உதாரணம்.என் தமிழ் மக்களுக்காக முதல் பாட்டு.இது சும்மா டிரெய்லர் தான்மா இன்னும் மெயின் பிக்சர பார்க்கலயே.நான் அவிழ்த்துவிடும் பாட்டுல பல விசிலு சத்தம் காதுலகேளு கேளு என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

 

Categories

Tech |